பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நம் கல்லூரியில் 12/01/2024 அன்று பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் அனைத்து துறை மாணவியரும் பங்கேற்ற மகிழ்ச்சியாக கொண்டாடினர். பல்வேறு போட்டிகளான கயிறு இழுத்தல், நாட்டுப்புற நடனங்கள் மற்றும் உரியடிதல் நடைபெற்றது. இதில் வேதியியல் துறை மாணவிகளும் கலந்துகொண்டு பொங்கலிட்டு தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாடினர்.
No comments:
Post a Comment